2022ஆம் ஆண்டு பொலிஸ் உப-பரிசோதகர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பான மூன்று பொலிஸ் பரிசோதகர்கள், பாதிக்கப்பட்ட உப-பரிசோதகருக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் மொத்தம் 15 இலட்சம் ரூபாவை தமது சொந்த நிதியிலிருந்து இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
தாக்குதலைத் தொடர்ந்து குறித்த உப-பரிசோதகரை பணியிடை நீக்கம் செய்தமை சட்டவிரோதமானது எனவும், அது அவரது உரிமையை மீண்டும் மீறுவதாகும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்காரணமாக, அந்த காலப்பகுதியில் கம்பஹாவிற்கு பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP), பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் தனிப்பட்ட இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது.
கம்பஹா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய குறித்த உப-பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னரே இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு பொலிஸ் உப-பரிசோதகர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பான மூன்று பொலிஸ் பரிசோதகர்கள், பாதிக்கப்பட்ட உப-பரிசோதகருக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் மொத்தம் 15 இலட்சம் ரூபாவை தமது சொந்த நிதியிலிருந்து இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
தாக்குதலைத் தொடர்ந்து குறித்த உப-பரிசோதகரை பணியிடை நீக்கம் செய்தமை சட்டவிரோதமானது எனவும், அது அவரது உரிமையை மீண்டும் மீறுவதாகும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்காரணமாக, அந்த காலப்பகுதியில் கம்பஹாவிற்கு பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP), பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் தனிப்பட்ட இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது.
கம்பஹா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய குறித்த உப-பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னரே இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது