-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில், மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர், 1800 போதை மாத்திரைகளுடன் யாழ்.போதை ஒழிப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.நகரப் பகுதியில், ‘ஒன்லைன் கொரியர் சேவையூடாக’ போதை மருந்துகள் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுவதாக, யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பதிசோதகர் கலம்சூரியவுக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதை அடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனவிரத்னவின் ஒருங்கமைப்பில் பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில், ‘கொரியர்’ சேவையூடாக கொழும்பிலிருந்து பொதி செய்யப்பட்டு, யாழ். குருநகர் பகுதியில் இருக்கும் தபால் நிலையத்திற்கு வந்த பொதியை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழுப்பு பிரிவினர் கைப்பற்றி சோதனையிட்ட போதே குறித்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் இந்த துரித நடவடிக்கையின் போது சுமார் 1800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
