மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டு காங்கோவிலிருந்து பிரான்ஸுக்கு திரும்பிய மருத்துவர் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு புதன்கிழமை அறிவித்துள்ளது.
தற்போதைய எபோலா பரவல் காலகட்டத்தில் பிரான்ஸ் நாட்டில் பதிவான முதல் நோயாளி இவராவார். குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், பொதுமக்களுக்கு மற்றும் ஐரோப்பிய மக்கள்தொகைக்கு எபோலா பரவும் அபாயம் குறைவாகவே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், காங்கோவில் பரவி வரும் எபோலா தொற்றால் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 267 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பரவல் ஆரம்பித்த முதல் மாதத்திலேயே உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக பதிவான எபோலா பரவலாக இது அமைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.