அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடனான இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையிலான புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் ஆரம்பமாகியுள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது லெபனானில் நிலவி வரும் பலவீனமான போர்நிறுத்தச் சூழலுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் 5ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இதுவாகும்.
இப்பேச்சுவார்த்தையில் லெபனான் சார்பில் அந்நாட்டுத் தூதுவர் நடா முவாவத் (Nada Mouawad) பங்கேற்பதுடன், இஸ்ரேலிய தூதுக்குழுவிற்கு அந்நாட்டுத் தூதுவர் யெஹியேல் லைட்டர் (Yehiel Leiter) தலைமை தாங்குகிறார்.
அமெரிக்க அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த ஜூன் 19 ஆம் திகதிஅமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்தும், லெபனானில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதை ஆதரிப்பதற்காக “லெபனான் மோதல் தவிர்ப்புப் பிரிவு” (Lebanon de-confliction cell) உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்தும் இந்த முக்கிய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.