ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போனதாக அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வந்துள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்கள் உதவுமாறும் பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹாலி எல பகுதியைச் சேர்ந்த தாய், தனது மகள் காணாமல் போனதாக மார்ச் 6ஆம் திகதி அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
- பெயர்: ரத்நாயக்க முதியன்செலகே கவிந்தியா பவானி
- வயது: 19 ஆண்டுகள்
- தேசிய அடையாள அட்டை எண்: 200750204474
- முகவரி: ஹெல மொரதொட்ட, ஹாலி எல
காணாமல் போன யுவதி, சுமார் 5 அடி 06 அங்குல உயரமும், மெலிவான பெண் என்றும், அவரது கூந்தல் இடுப்பு வரை வளர்ந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக அட்டம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியை – 071 – 8591528 அல்லது அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தை 055 – 2294965 தொடர்பு கொள்ளவும் என பொலிஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.