அநுராதபுரம் – மதவாச்சி ஏ9 வீதியில் ரம்பேவ பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகளும் தனியார் பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், விபத்தில் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.










