பெந்தோட்டை கடற்பகுதியில் நீராடச் சென்ற 30 வயதுடைய ரஷ்யப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலையில் சிக்கிய குறித்த வெளிநாட்டுப் பிரஜை, பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பெந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பெந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










