மாத்தறை-கந்தர பிரதேசத்தின் அக்கர 18 பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 16 வயதுடைய சிறுவன் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேவிநுவர பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, அவர் தலல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறுவனுக்கும் மற்றொரு குழுவினருக்கும் இடையில் ஏற்கனவே நிலவி வந்த முரண்பாடு தீவிரமடைந்ததன் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










