வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் மறுசீரமைக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் வெளிநாட்டு இலங்கைத் தூதரகங்களுக்கான புதிய ‘பொது இணையத்தளக் கட்டமைப்பு’ (Common Website Platform) ஆகியன இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.
அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அமைச்சின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதி அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களின் தலைவர்கள் இணையவழியாகக் கலந்துகொண்டனர்.
பொதுமக்களுக்கான சேவை வழங்கலின் செயல்திறன், அணுகல்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக மேம்படுத்துதல்.
புதுடெல்லி, மாலே, புக்கரெஸ்ட், பிரேசிலியா, வெலிங்டன், தி ஹேக் மற்றும் கெய்ரோ ஆகிய 7 வெளிநாட்டுத் தூதரகங்கள் முதற்கட்டமாக இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இது படிப்படியாக ஏனைய தூதரகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
அமைச்சின் பிரிவுகளுடன் SLCERT, ICTA மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றின் பங்களிப்புடன், Frontwalker (Pvt) Ltd நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இத்திட்டம் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.