2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழக்குடன் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமத்திலக்கவுக்கு (I.G.S. Premathilaka) உச்ச நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, நீதிமன்றம் அவருக்கு 3 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளதுடன், அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர், நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே அலட்சியம் செய்துள்ளதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக அமைவதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.