டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையையும், அனர்த்தத்திற்குள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு சியெட் நிறுவனத்தின் களனி கிளை அனைத்து நிறுவன ஊழியர் சங்க உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளமான 1,148,000.00 ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது.
அதற்கான காசோலையை, சியெட் நிறுவனத்தின் களனி கிளை அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் செயலாளர் டி. ஜி. எஸ். டி. நவரத்ன, இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியிடம் கையளித்தார்.
சியெட் களனி கிளை அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் பொருளாளர் வய். பி. ஐ. சி. கருணாதிலக உள்ளிட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.