சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கடற்கரை தூய்மையாக்கல் நடவடிக்கை

-மன்னார் நிருபர்-

சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கரையோர தூய்மையாக்கல் நடவடிக்கை மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது.

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு கனகாம்பிகை, மன்னார் நகர சபையின் தவிசாளர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக மாதர், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், கிராம மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கரையோர தூய்மையாக்கல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பின்னர் மன்னார் நகர சபையின் உதவியுடன் கழிவுப் பொருட்கள் அகற்றிச் செல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.