சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,541 டொலர்களாக விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை 75 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையில் இன்று தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் (ஒரு பவுன்) 393,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம் (ஒரு பவுன்) 361,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது