50 வது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு, கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட சதுரங்கப் போட்டி கடந்த சனிக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பல பிரதேச செயலகங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட நிலையில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவு சிறப்பான திறமையைக் காட்டி மாவட்ட சாம்பியனாகத் தெரிவானது.
இதன் மூலம் மாகாண மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
சாய்ந்தமருது பிரதேச செயலக அணி தொடர்ந்து 6 ஆண்டுகளாக மாவட்ட மட்டப் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
அத்துடன், கடந்த 3 ஆண்டுகளாக மாகாண மட்டப் போட்டியிலும் சாம்பியனாகத் தெரிவாகி தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தேர்வாகி வருவதால், இவ்வணி மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறது.
அணியின் இந்த தொடர்ச்சியான வெற்றிக்கு விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.