இலங்கை செஸ் சம்மேளன ஏற்பாட்டில் தேசிய யூத் செஸ் சம்பியன்சிப் 2023 அம்பாறை டீ. எஸ். சேனநாயக்கா தேசிய பாடசாலையில் நேற்று முன் தினம் சனி மற்றும் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
இந்த போட்டியில் சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய மாணவி முபீன் பாத்திமா சபிலுல் லமாஹ் (வயது – 9 ) பெண்கள் பிரிவு சதுரங்க போட்டியில் வெற்றியீட்டி தொடர்ந்து 3 வருடகாலமாக அம்பாறை மாவட்ட சம்பியன் எனும் பட்டத்தை தக்கவைத்துள்ளார்.
இவர் அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் தேசிய ரீதியில் விளையாடக் கூடிய வாய்ப்பையும்இ சர்வதேசமட்டத்தில் விளையாடக் கூடிய வாய்ப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.