கின்னஸ் சாதனைப் படைத்த உலகின் உயரமான பெண்

உலகின் உயரமான பெண் என்று கின்னஸ் சாதனைப் படைத்த துருக்கி நாட்டை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ருமேசா கெல்கி வாழ்க்கையில் முதல் முதலில் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

25 வயதான ருமேசா கெல்கி அரிதான மரபணு கோளாறு காரணத்தினால் பாதிக்கப்பட்டவர். அதனால் வளர்ச்சி அதிகரித்து 7 அடி உயரம் வளர்ந்துள்ளார். அதற்காக உலகின் உயரமான பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

அவரின் உயரம் காரணமாக அவரால் விமான பயணம் மேற்கொள்ள இயலாத நிலையில் துருக்கிய ஆர்லைன் அவரை விமானத்தில் பறக்க வைத்துள்ளது. அதற்காக விமானத்தில் 6 இருக்கைகளை விமான நிர்வாகிகள் அகற்றியுள்ளனர்.

துர்கி இஸ்தான்பில்லில் இருந்து அமெரிக்கா சான் ஃபாரன்ஸ்கோ வரை அவர் பயணம் செய்துள்ளார். இந்த நெகிழ்வான சம்பவத்தின் அனுபவத்தை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.