ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:24 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டர் அலகாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்ட பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி, ஜப்பானின் வடக்கு இவாட் (Iwate) மாகாணத்திற்கு அப்பால் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தச் சம்பவத்தின் போது சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.