சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கமு/கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில், தரம் 1 மற்றும் 4 மாணவர்களுக்கு பாடசாலை மருத்துவ பரிசோதனை (SMI Program) இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்டதுடன், சுகாதார துறையினரின் பங்கேற்புடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்களின் உடல் நலம், வளர்ச்சி நிலை, பார்வை, கேள்வித்திறன் உள்ளிட்ட அடிப்படை சுகாதார அம்சங்கள் இப்பரிசோதனையின் போது மதிப்பீடு செய்யப்பட்டன.
இதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே மாணவர்களில் காணப்படும் சுகாதாரப் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றிற்கு தேவையான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்குவது முக்கிய நோக்கமாகக் காணப்படுகிறது.

பாடசாலை நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.
இத்தகைய சுகாதார பரிசோதனைகள் மாணவர்களின் நலனை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
