எல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவல் காரணமாக தேயிலை தொழிற்சாலைக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.