இரத்தினபுரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுதும் நோக்கில், மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான கணணிகள், ஸ்மார்ட் போர்ட், மடிக்கணினிகள் மற்றும் அதற்குரிய தளபாடங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழழை மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தின, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சாந்த பத்மகுமார அவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுபினர்கள் இணைந்து இவ்வுபகரணங்களை பாடசாலை அதிபர்களிடம் வழங்கி வைதனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், “21ம் நூற்றாண்டின் கல்வி என்பது தொழில்நுட்பத்துடன் இணைந்தது. தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்களும் ஏனைய மாணவர்களுக்கு இணையாக டிஜிட்டல் கல்வியை பெற வேண்டும் என்பதே எமது நோக்கம். இந்த உபகரணங்கள் வெறும் கருவிகள் அல்ல, அவை மாணவர்களின் எதிர்கால கனவுகளுக்கான கதவுகள்” என தெரிவிதார்.
ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தின உரையாற்றுகையில், “சபரகமுவ மாகாணத்தில் கடந்த காலத்தில் புறக்கணிக்கபட்ட தமிழ் பாடசாலைகளுக்கு இன்று முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த ஆரம்பம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்” என அவர் உறுதியளித்தார்.
வழங்கப்பட்ட உபகரணங்கள் மூலம் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, மாணவர்கள் கணினி அறிவு, இணைய வளங்களை பயன்படுத்தி கற்கும் வாய்ப்பு பெறுவர். ஆசிரியர்களுக்கும் டிஜிட்டல் கற்ப்பிதல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார்.