வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர், கட்டிடமொன்றிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்குத் தொடர்பாக குற்றவாளியாக அடையாளங் காணப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த ஒருவராவார்.
கட்டிடத்திலிருந்து விழுந்ததையடுத்து, அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அமரகீர்த்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி உயிரிழப்பு
செய்தி கேளுங்கள்