Sri Lanka Tamil News Site

இருமல் சிரப் குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழப்பு

- Advertisement -

உஸ்பெகிஸ்தானில் நாட்டில் இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்தை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மரியான் பயோடெக் என்ற மருந்து நிறுவனம், டாக்-1 மேக்ஸ்(Doc-1 Max) என்ற இருமல் மருந்தை தயாரித்து வருகிறது.

உஸ்பெகிஸ்தானில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக 21 குழந்தைகள் டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தை அருந்தியதாக கூறப்படுகிறது. இதில்,18 குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

- Advertisement -

மருத்துவரின் பரிந்துரை இன்றி அளவுக்கு அதிகமாக இருமல் மருந்தை சிறுவர்களுக்கு கொடுத்ததே,உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

அத்துடன்,எத்திலீன் கிளைக்கால் என்ற ரசாயனம்,டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தில் கலந்திருப்பதாகவும், இதுவும் குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, உஸ்பெகிஸ்தானில் மரியான் பயோடெக் நிறுவனத்தின், டாக்-1 மேக்ஸ் (Doc-1 Max) இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -