கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பெறுகின்ற பயிலுநர் ஆசிரியர்களின் நிதிச் சுமையை இலகுபடுத்துவதற்காக, அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 20,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைப்பதாக என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அதிகரிப்பானது 2027 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து 10,500 ரூபாயிலிருந்து 20,000 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது அவர்களின் ஆசிரியர் பயிற்திக் காலத்திற்குள் வழங்கப்படுகின்ற நிதி ஒத்துழைப்பாகவும் அதேபோன்று எமது கல்வி முறையும் எதிர்கால பொறுப்புக்களை பொறுப்பேற்பதற்கு அவர்களை தயார்படுத்துவதற்கு உதவியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அவர்களது கல்வித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பிக்கு மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற நாளாந்தக் கொடுப்பனவு 2027 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 15 ரூபாயிலிருந்து 50 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
பிக்கு அல்லாத மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற நாளாந்தக் கொடுப்பனவு 5 ரூபாயிலிருந்து 25 ரூபா வரையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
அதேநேரம் மதிப்புமிக்க தார்மீகமான குணநலன்களைக் கொண்ட சிறுவர் பரம்பரையொன்றை உருவாக்கும் பொருட்டு அறநெறி பாடசாலைக் கல்வியின் தரத்தைப் பாதுகாக்கும் வகையில் தன்னார்வத்துடன் பங்களிப்புச் செய்கின்ற அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற வருடாந்தக் கொடுப்பனவை 2027 ஆம் ஆண்டிலிருந்து 7,500 ரூபாயிலிருந்து 12,500 ரூபா வரை 5,000 ரூபாயினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பொன்றாக பெற்றுத் தரப்படுகின்ற பாடசாலை சீருடைகளை எதிர்வரும் வருடத்திலும் அவ்வாறே பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த சில வருடங்களுக்கும் இவ் அன்பளிப்பைப் பெற்றுத்தருவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.










