சீரான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 26.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுக்கூரையில் மின்சக்தி படலம் பொருத்தியுள்ள நுகர்வோருக்கு சேமிப்புக்கு மின்கலம் கொள்வனவுக்கு நிவாரணம் வழங்க ரூ. 350 மில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 30 மெகாவோட் கொள்ளளவு கொண்ட மின்கலச் சேமிப்புத் தொகுதி நிறுவப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சூரிய மின்கல இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 10% துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி (PAL) நீக்கப்படவுள்ளது.










