Sri Lanka Tamil News Site

தொடர்ந்து ஹெரோயின் பாவித்தவர் உயிரிழப்பு

- Advertisement -

-யாழ் நிருபர்-

தொடர்ச்சியான ஹெரோய்ன் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்.கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

- Advertisement -

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி இவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டார்.

கடந்த 10ஆம் திகதி இவர் வயிற்று வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பயனின்றி இவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

தொடர்ச்சியான ஹெரோயின் பாவனையே இவரது உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -