அமெரிக்காவின் வானில் சீன உளவு பலூன்

லத்தீன் அமெரிக்காவின் மேல் வானில் மற்றொரு சீன உளவு பலூன் மிதப்பதாக பென்டகன் அறிவித்துள்ளது.

மத்திய அமெரிக்காவிற்கு மேல் வானில் மிதக்கும் சீன உளவு பலூன் பற்றிய தகவல் வெளியான ஒரு நாள் கழித்து, லத்தீன் அமெரிக்க வான்வெளியில் இதேபோன்ற மற்றொரு பலூனை பென்டகன் அவதானித்துள்ளது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சீன உளவு பலூன் சந்தேகத்திற்குரியதாக எழுந்துள்ள சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தோனி பிளிங்கன் இந்த வாரம் மேற்கொள்ளவிருந்த சீன விஜயமும் ஒத்திவைக்கப்பட்டது.