அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற ‘டைம்’ (TIME) இதழ், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கலை, அரசியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் இப்பட்டியலில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பத் துறையில் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை, யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
கலைத்துறையில் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் புகழ்பெற்ற மிச்செலின் நட்சத்திர சமையற்கலைஞர் விகாஸ் கன்னா ஆகியோர் செல்வாக்கு மிக்க நபர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் ரீதியாக உலகை வழிநடத்தும் தலைவர்களின் வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை லியோ அவர்களும் இப்பட்டியலில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளிப் பயணத்தின் தளபதி ரீட் வைஸ்மேன், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி ஆகியோரும் இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.
மேலும், ஒலிம்பிக் சாதனையாளர்களான அலிசா லியூ, ஹிலாரி நைட், குளோ கிம் மற்றும் மருத்துவத் துறையில் அரிய சாதனைகளை நிகழ்த்திய கிரண் முசுனுரு, ரெபேக்கா அஹ்ரன்ஸ்-நிக்லாஸ் ஆகியோரும் டைம் இதழின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்தும் முன்னோடிகள் மற்றும் ஜாம்பவான்களைக் கௌரவிக்கும் வகையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Pope Leo XIV (Head of the Catholic Church)
Xi Jinping (President of China)
Benjamin Netanyahu (Prime Minister of Israel)
Donald Trump (US President)
Mark Carney (Prime Minister of Canada)
Claudia Sheinbaum (President of Mexico)
Sanae Takaichi (Prime Minister of Japan)
Balendra Shah (Prime Minister of Nepal)
Marco Rubio (US Secretary of State)
Gavin Newsom (Governor of California)
Zohran Mamdani (New York City Assemblyman/Mayor)
Susie Wiles (White House Chief of Staff)
Tarique Rahman (Bangladeshi Leader)
Mette Frederiksen (Prime Minister of Denmark)
Netumbo Nandi-Ndaitwah (Namibian Leader)
Rafael Mariano Grossi (IAEA Director General)
Henna Virkkunen (European Commission VP)
Jacob Frey (Mayor of Minneapolis)
Dan Caine (Joint Chiefs of Staff)
Steve Witkoff (US Special Envoy)
Mark Kelly (US Senator)
Sundar Pichai (CEO of Google/Alphabet)
Neal Mohan (CEO of YouTube)
Gwynne Shotwell (SpaceX COO)
Dario Amodei (Anthropic)
Daniela Amodei (Anthropic)
Michael Dell (Philanthropist/Dell)
Susan Dell (Philanthropist/Dell)
MrBeast (Content Creator/Entrepreneur)
CC Wei (CEO of TSMC)
Jeremy Allaire (Circle CEO)
Sarah Friar (OpenAI CFO)
John Furner (Walmart US CEO)
David Ellison (Skydance Media)
Josh D’Amaro (Disney Parks Chairman)
Aliko Dangote (Industrialist)
Lip-Bu Tan (Tech Investor)
Fatih Birol (IEA Executive Director)
Ranbir Kapoor (Actor)
Zoe Saldaña (Actor)
Ben Stiller (Actor/Humanitarian)
Benicio Del Toro (Actor)
Ethan Hawke (Actor/Director)
Kate Hudson (Actor/Entrepreneur)
Dakota Johnson (Actor)
Claire Danes (Actor)
Keke Palmer (Actor/Host)
Sterling K. Brown (Actor)
Alan Cumming (Actor)
Noah Wyle (Actor)
Jonathan Groff (Actor)
Wagner Moura (Actor)
Rhea Seehorn (Actor)
Jafar Panahi (Director)
Nikki Glaser (Comedian)
Tayari Jones (Novelist)
Yiyun Li (Author)
Freida McFadden (Author)
Luke Combs (Country Star)
Jennie (Global Pop Icon)
Coco Jones (Singer/Actor)
Hilary Duff (Musician/Actor)
Rauw Alejandro (Musician)
Noah Kahan (Musician)
Anderson .Paak (Musician)
Scottie Scheffler (Golfer)
Chloe Kim (Snowboarder)
Lando Norris (F1 Driver)
Noah Lyles (Sprinter)
Hilary Knight (Hockey Player)
Alysa Liu (Figure Skater)
Vikas Khanna (Chef/Humanitarian)
Ralph Lauren (Fashion Designer)
Victoria Beckham (Fashion Designer)
Matthieu Blazy (Bottega Veneta Designer)
Anok Yai (Model)
Nancy Silverton (Chef)
Mashama Bailey (Chef)
Lynsey Addario (Photojournalist)
Cao Fei (Artist)
Walter Hood (Landscape Architect)
Shirin Ebadi (Nobel Laureate)
Dolores Huerta (Labor Leader)
Heather Gerken (Yale Law Dean)
Kica Matos (Advocate)
Shannon Minter (Legal Director)
Lauren Hersh (Advocate)
Mamadou Amadou Ly (Activist)
Zabib Musa Loro (Peacebuilder)
Rachel Foster (Advocate)
Sabrina Walter (Advocate)
Reid Wiseman (Artemis II Commander)
Tony Tyson (Astrophysicist)
Kiran Musunuru (Geneticist)
Rebecca Ahrens-Nicklas (Geneticist)
Precious Matsoso (Health Advocate)
Mari Luz Canaquiri Murayari (Environmentalist)
Mariangela Hungria (Agricultural Scientist)
Luciano Moreira (Scientist)
Anne-Claire Amprou (Health Policy)