சீனாவின் ஷின்ஜியாங் (Xinjiang) மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள துர்பான் (Turpan) நகருக்கு அருகில் 5.0 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:55 மணியளவில் பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.