மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் செலவிடும் நேரத்தில், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நேரம் எவ்வித நோக்கமும் இன்றி செலவிடப்படுவதாக புதிய ஆய்வு முடிவு ஒன்று குறிப்பிடுகின்றது.
Virgin Media O2 எனப்படும் ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, இங்கிலாந்து நாட்டில் பெரியவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 4 மணி நேரத்தை தங்கள் கைத்தொலைபேசிகளில் செலவிடுவதாகவும், அதில் 36 சதவீதமான நேரத்தில் செயலிகள் மற்றும் சமூக ஊடகங்களில் எவ்வித காரணங்களும் தேவைகளும் இன்றி வெறுமனே கைத்தொலைபேசி ஸ்கிறீனை ஸ்க்ரோல் (scrolling) செய்வதை கண்டறிந்துள்ளது.
எவ்வித காரணங்களுமின்றி இவ்வாறு கைத்தொலைபேசியை பயன்படுத்தியவர்கள், அதன் பிறகு இணையத்தில் தீங்கு விளைவிக்கும் அல்லது விரும்பத்தகாத உள்ளடக்கங்களை எதிர்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். .
இந்த ஆராய்ச்சி 2024 முதல் 2026-க்கு இடையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. இதில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் வயதுடைய 6,000 பேரிடமிருந்து பெறப்பட்ட பதில்கள் அடங்கும்.