சுகாதாரம் மற்றம் ஊடக அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் தரமான ஊடக அறிவு தொடர்பாக ஊடக பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தெளிவூட்டல் பயிற்சிப்பட்டறை இடம்பெற்று வருகின்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்தினால் குறித்த பயிற்சிப்பட்டறை இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வில் திறமை மிகு வளவாளர்கள் வளவாண்மை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.