இந்தியாவின்- பீகாரில் தொலைபேசி நிறுவன அதிகாரிகள் போல நடித்த கும்பல் தொலைபேசி கோபுரத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக அங்கு ரஜில் இன்ஜின் பாகங்கள், பாலத்தில் உள்ள தகடுகள் திருட்டுசம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் பீகாரின் பாட்னாவில் உள்ள யார்பூர் ராஜ்புதானா என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொலைபேசி கோபுரத்தையை குழுவாக சேர்ந்து திருட்டுதனமாக கழட்டி சென்றுள்ளனர்.
இந்த தனியார் தொலைபேசி நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரம் ஒன்று சுமார் 16 வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்டுள்ளது.
- Advertisement -
சமீபத்தில் தொலைபேசி நிறுவன அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கோபுரம் அமைக்கப்பட்ட நில உரிமையாளரை சந்தித்து தொலைபேசி கோபுரம் ஒப்பந்த காலம் முடிந்து விட்டதாகவும், அதனால் தொலைபேசி கோபுரம் அவரது நிலத்திலிருந்து அகற்றுவதாகவும் கூறியுள்ளனர்.
அதை அவரும் நம்பிய நிலையில் 2 நாட்களில் மொத்தமாக 25 பேர் சேர்ந்து செல்போன் கோபுரம் பிரித்து ட்ரக்கில் ஏற்றி திருடி சென்றுள்ளனர்.
தொலைபேசி சிக்னல் பிரச்சினை முறைப்பாட்டால் சமீபத்தில் தொலைபேசி கோபுரம் ஆய்வு செய்வதற்காக உண்மையான அதிகாரிகள் வந்தபோதே அங்கு பொருத்தப்பட்டிருந்த தொலைபேசி கோபுரம் காணாமல் போனதை அதிர்ச்சியடைந்தனர்.
இதன் பின்னர் நடந்த உண்மை தெரியவந்துள்ளது. இந்த டவரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.19 லட்சம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -