கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று புதன்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்களும், மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்தின் சாரதியும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அம்பலாந்தோட்டை திசையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கதிர்காமம் நோக்கிப் பயணித்த லங்கம பேருந்துடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
