தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இரவு 10 மணி நிலவரப்படி தவெக – 109, திமுக – 73, அதிமுக 52 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் ராம் சரண் மற்றும் நடிகை ராஷ்மிகா ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
நடிகர் ராம் சரண் தனது எக்ஸ் வலைதளத்தில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் தொலைநோக்குப் பார்வையும், மக்களுடனான உங்கள் பிணைப்பும் உண்மையாகவே மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்ல உங்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை ரஷ்மிகா தனது எக்ஸ் பக்கத்தில், “”வாழ்த்துகள் விஜய் சார்!! உங்கள் வெற்றியில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புதிய சகாப்தத்தில் உங்களைக் காண்பதில் மிகுந்த உற்சாகமாக உள்ளது! உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சார்!”” என்று பதிவிட்டுள்ளார்