இந்தியா-கர்நாடக மாநிலத்தில் ஆடை விவகாரத்தில் ஏற்பட்ட மோதல், ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகாவில் தனது மனைவி ‘நைட் டிரெஸ்’ (Night Dress) அணிந்ததற்காக, ஆத்திரமடைந்த கணவர் அவரை தீவைத்து எரித்துக் கொன்றுள்ளார்.
வீட்டில் இருக்கும்போது நைட் டிரெஸ் அணிவதை கணவர் பலமுறை கண்டித்ததாகவும், அதனை மனைவி பொருட்படுத்தாததால், இந்த கொடூரத்தை அவர் நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.
கொலையைச் செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரைப் பிடிக்க பொலிஸார் தனிப்படை அமைத்து வலைவீசித் தேடி வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.