நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடல் பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீட்டர் (60 – 65 kmph) வரை அதிகரிக்கக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.