மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் ஜீன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு – திருமலை வீதியிலுள்ள விடுதி ஒன்றில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் தந்தை போலி அடையாள அட்டையை வைத்திருந்தமை மற்றும் பிள்ளைகளை வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, குறித்த சந்தேகநபரை நேற்று வியாழக்கிழமை கைது செய்த பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவரை எதிர்வரும் ஜீன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்