கையடக்க தொலைபேசிகளுக்கு தடை

புனித ஸ்தலங்களுக்குள் கைபேசிகளை கொண்டு செல்ல தடை விதித்து தமிழக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவில் ஒன்றில் நடந்த பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்கவும், யாத்ரீகர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்று தெரிவித்துள்ளது

புண்ணிய ஸ்தலங்களின் நுழைவாயிலில் கைபேசிகளை கொடுத்துவிட்டு போக பாதுகாப்பு காவலரை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.