2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மனைப் பொருளியல் பாடத்துக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஒக்டோபர் 10 முதல் 20ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 44 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எழுத்துமூலப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கே இந்தச் செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை அனுமதி அட்டை கிடைக்காத பரீட்சார்த்திகள், ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தங்களது அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் 011 2784208 மற்றும் 011 2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தைத் தொடர்புகொள்ள முடியும்.











