அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு 𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினால் கடந்த திங்கட்கிழமை மென்திறன்கள் தொடர்பான இரண்டு செயலமர்வுகள் மட்டக்களப்பு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில், இலவசமான முறையில் இப்பாடசாலையில் “வெற்றிக்கான மென் திறன்கள்” (Soft Skills for Success – S3) எனும் தலைப்பில் தரம் 11, 12 , 13 மாணவர்களுக்கும், “சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி” ( Team Effort for Better Results – TEBR) எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சிகளை, பயிற்சியாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு ஆலோசகரும் KTP ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவன நிறுவுநர் முனைவருமான K.T.பிரஷாந்தன் நடாத்தினார்.











