2016ஆம் ஆண்டு முதல் செயலிழந்துள்ள திக்கம் வடிசாலையை மீண்டும் இயக்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர், பெருந்தோட்டத்துறை பிரதியமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், திக்கம் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் வடிசாலையை இயக்கும் உரிமையைப் பெற்றுள்ள தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
வடிசாலையை மீளச் செயற்படுத்துவதற்கு தடையாக உள்ள சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பிரதேச மக்களின் நலன், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் விரைவான தீர்வை எட்டுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
முன்னைய ஆட்சிக் காலங்களில் உருவான தீர்க்கப்படாத சட்டச் சிக்கல்களே வடிசாலையின் செயற்பாட்டை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விரைவாக தீர்த்து திக்கம் வடிசாலையை மீண்டும் முழுமையாக இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.