அமெரிக்காவின் புகழ்பெற்ற H-1B விசா திட்டத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரும் வகையிலும், அதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை (Green Card) பெறுவதற்கான வாய்ப்பை முற்றிலுமாக இரத்து செய்யும் வகையிலும் அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெக்சாஸின் 21ஆவது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிரப் போக்குடைய குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிப் ராய் (Chip Roy), கடந்த வியாழக்கிழமை (04) “அமெரிக்க பணியாளர்கள் வேலைவாய்ப்புச் சட்டம்” (American Workers Employment Act) என்ற வரைவுச் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும், வெளிநாட்டு மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவில் தற்காலிகமாகப் பணிபுரிய அனுமதிக்கும் (OPT – Optional Practical Training) திட்டத்தை முழுமையாக இரத்து செய்யவும் இந்த சட்டமூலம் பரிந்துரைக்கிறது.