நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்கத் தவறியமை தொடர்பில் லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தின் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த நிறுவனத்திற்கு எதிராக இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்திற்கு அழைப்பாணை விடுப்பதற்கும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










