450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை, இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலைத் திருத்தம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.










