ரி.எம்.வி.பி கட்சி உப தலைவரின் உடல் கள்ளியங்காட்டில் தகனக்கிரியை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள்கட்சியின் உப தலைவரும்  மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவருமான கந்தையா யோகவேளின் உடல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு கள்ளியங்காடுமயானத்தில் தகனம்செய்யப்பட்டது.

தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள்(ரீஎம்விபி) கட்சிக்கொடி போர்த்தப்பட்டபின் சடலம் இரங்கலுரையின் நிகழ்வுகளின்பின்னர் அன்னாரதுவாவிக்கரை வீதி2 இல் இருந்துகள்ளியங்காடு மயானத்திற்குஎடுத்துச் செல்லப்பட்டுதகனம் செய்யப்பட்டது.

70வயதைத் தாண்டியயோகவேள் கடந்தசித்திரைப் புத்தாண்டுதினத்தில் மரணமடைந்திருந்தார்.இறுதிக் கிரியைநிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள்பிரதி மேயர்ஆப்ரஹாம் ஜோர்ஜ்பிள்ளை, மட்டக்களப்புமாநகர சபைமுன்னாள் உறுப்பினர்தீபன் ராஜன், காந்தி சேவாசங்கத் தலைவர்கதிர் பாரதிதாஸன்,  ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் இரங்கலுரையாற்றினர்.

அங்கு அனுதாபஉரையாற்றிய தற்போதையநாடாளுமன்ற உறுப்பினரும்கிராமிய வீதிகள்அபிவிருத்தி இராஜாங்கஅமைச்சரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்  தலைவரும் கிழக்குமாகாண முன்னாள்முதலமைச்சரும் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்),“நம்மைவிட்டுப் பிரிந்தஅமரர் யோகவேள் அவர்கள், பிரபல்யம் இல்லாமல்மக்களுக்கும் சமூகத்திற்கும்பல அளப்பரியசேவைகளைச் செய்திருக்கிறார்.நெருக்கடியான காலகட்டங்களிலே முன்னின்று சேவை செய்தவர் அவர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத் துறையிலே புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் பல முயற்சிகளை எடுத்தவர்” என்றார். இறுதிக் கிரியைநிகழ்வுகளில் சிவநேசதுரைசந்திரகாந்தன் உட்படஅக்கட்சியின் முக்கியஸ்தர்கள்,மகளிர் அணியினர்,மாநகர சபைமுன்னாள் உறுப்பினர்சிவம் பாக்கியநாதன்,மட்டக்களப்பு சிவில்சமூகத் தலைவர்சித்திரப்போடி மாமாங்கராஜாஉட்பட இன்னும்ஊர்ப் பிரமுகர்கள்சமூக அமைப்புக்களின்பிரதிநிதிகள்  உற்றார் உறவினர்கள்கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்