அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த குடியிருப்பு பகுதியில் சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகவிய தகவலையடுத்து குடியிருப்பு பகுதிக்கு சென்ற பொலிஸார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த வீட்டில் பதுங்கி இருந்த நபர்கள் பொலிஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பொலிஸார் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
அதில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதோடு, 4 பொலிஸார் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் தப்பியோடினார்.
இதையடுத்து, தப்பியோடிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்