இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை மேலும் சரிவடைந்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், பல வங்கிகளில் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் அதிகரித்துள்ளன.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.35 ரூபாயிலிருந்து 326.60 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை விலை 335.60 ரூபாயிலிருந்து 335.80 ரூபாயாக உயர்ந்துள்ளது.
NDB வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.25 ரூபாயிலிருந்து 326.50 ரூபாயாகவும், விற்பனை விலை 335.25 ரூபாயிலிருந்து 335.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 326.53 ரூபாயிலிருந்து 326.92 ரூபாயாகவும், விற்பனை விலை 334.62 ரூபாயிலிருந்து 335.03 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 324.59 ரூபாயிலிருந்து 324.84 ரூபாயாகவும், விற்பனை விலை 334.50 ரூபாயிலிருந்து 334.75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.50 ரூபாயிலிருந்து 327 ரூபாயாகவும், விற்பனை விலை 334.50 ரூபாயிலிருந்து 335 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை சுமார் 335 ரூபாய் மட்டத்தை எட்டியுள்ளது.










