முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரத்த குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.