பண்டாரகம பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவனைக் கடுமையாகத் தாக்கியதாகப் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவனின் தந்தையால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின்படி, அதிபர் தனது இரு கைகளாலும் மாணவனின் முகத்தில் பலமுறை அறைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலினால் மாணவனின் முகத்தில் வெளிப்படையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான வலி காரணமாகப் பல் துலக்கக்கூட முடியாத நிலையில் அவர் இருந்ததாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.
காயமடைந்த மாணவன் ஆரம்ப சிகிச்சைக்காக வெத்தார மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை பண்டாரகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.










