3,900 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பலொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த எரிவாயு தொகையை இறக்கும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எரிவாயு தொகை கிடைப்பதன் ஊடாக, எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் மேலும் 350,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் எரிவாயு விநியோகத்தைத் தடையின்றித் தொடரும் நடவடிக்கையாக, இன்று (18) உட்பட கடந்த மூன்று நாட்களுக்குள் 350,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அவசியமின்றி எரிவாயு தொகையைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.










