முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஒருவரின் மருத்துவ நிலை குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு மருத்துவ நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்களுக்கே அதிகாரம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த சஞ்சீவ எதிரிமான்ன, மஹிந்த ராஜபக்ஷ தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை உறுதிப்படுத்தியதுடன், அவரது உடல்நிலை தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட மறுத்தார்.
“தற்போது என்னால் கூறக்கூடியது, மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதையே. அவரது தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளதால், இப்போதைக்கு இந்தத் தகவலை மாத்திரமே என்னால் வெளியிட முடியும்” என அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் ஏதேனும் இருப்பின், அவை சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களால் வெளியிடப்பட வேண்டும் என்றும் சஞ்சீவ எதிரிமான்ன வலியுறுத்தினார்.









